Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு... இதுவரை இல்லாத தரமான சம்பவம்... அடிச்சுத்தூக்கத் துணிந்த மாடுபிடி வீரர்கள்..!

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி மதுரை மாவட்டத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 

Jallikattu Player 2 lakh Insurance
Author
Tamil Nadu, First Published Jan 14, 2019, 12:03 PM IST

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி மதுரை மாவட்டத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 

Jallikattu Player 2 lakh Insurance

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா மதுரை மாவட்டத்தில் நாளை முதல் தொடங்குகிறது. முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மதுரை அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க 700-க்கும் மேற்பட்ட காளைகள் தயாராக உள்ளன. 600 மாடுபிடி வீரர்களும் இதற்காக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர். புதன்கிழமை மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. வியாழக்கிழமை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 880 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 850 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டுவிட்டன. இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள் பங்கேற்கிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக மதுரை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Jallikattu Player 2 lakh Insurance

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு முதல் இன்சூரன்ஸ் வசதியை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பிரதான்மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் இந்த இன்சூரன்ஸ் வசதி செய்யப்படுகிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.Jallikattu Player 2 lakh Insurance

வங்கி கணக்குகள் இல்லாத மாடுபிடி வீரர்களுக்கு இன்று வங்கி கணக்குகளையும் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இன்சூரன்சு செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம். இவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். படுகாயம் மற்றும் மரணம் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்திற்கு இந்த இன்சூரன்ஸ் வசதி பெரும் உதவியாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios