ஊக்கமது கைவிடேல்… ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் வெல்லும்…கமலஹாசன் வாழ்த்து…

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி இளைஞர்களால் தன்னெழுச்சியாக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்,தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள்,சமூக ஆர்வலர்கள்,கிரிக்கெட் வீரர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன்,தற்போது அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மக்களுக்கு தனது டிவிட்டர் வாயிலாக தற்போது மீண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்..

தமிழக மக்களுக்கு வாழ்த்துகள்.நமது அதிருப்திகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த போராட்டம்.காயங்களுக்கு பேண்ட் எயிட் வேண்டாம்.காயங்களை முற்றிலும் குணப்படுத்துங்கள்.ஏற்கனவே போதுமான அளவு காயமடைந்துவிட்டோம்.”என தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்,

இதே போன்று கமலஹாசன் மற்றொரு டவீட்டில் ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல் என தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.