போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்…உச்சகட்ட அராஜகம்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று காலை 7 மணி முதல் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது சென்னை, கோவை, திருச்சி, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்ட இளைஞர்கள் வாடிவாசல் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 22 மணி நேரத்திற்கு மேலாக இளைஞர்களின் இந்த போராட்டம் தொடர்கிறது. உள்ளூர் மக்களும் ஆதரவு தந்து இளைஞர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் இன்று அதிகாலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களை போலீஸ் சுற்றி வளைத்தது. வாடிப்பட்டி வட்டாட்சியர் இங்கு வந்து போராட்டக்காராக்ளை உடனடியாக கலைந்து செல்லுமாற எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அங்கு வந்த எஸ்.பி யும் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார்.ஆனால் கொஞ்சமுக் கலங்காத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக துக்கிச்சென்று வைகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

பெண்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். அப்போது பீட்டாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதனைத் தொடந்து 3 பேருந்துகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதையடுத்து 22 மணி போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் இளைஞர்களின் இந்த எழுச்சிமிகு போராட்டத்தீ பற்றிக் கொண்டுள்ளது. இது கொளுந்துவிட்டு எரியும் என்பதில் ஐயமில்லை.