jai and prem drunk then met with an accident

நடிகர் ஜெய், பிரேம்ஜி சென்ற கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இவர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

"பார்ட்டி" படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதை கொண்டாடும் விதமாக, இன்றும் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் பார்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது.பார்ட்டியில் சற்று மட்டையான நடிகர் ஜெய், நிஜ ஹீரோமாதிரி வண்டி ஒட்டி வந்துள்ளார்.ஆனால், சற்று தடுமாறி அடையாறு தடுப்பு சுவரில் மோதியதால், அவருடைய காரும் சற்று சேதம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து குடி போதையில் கார் ஓட்டியது, பொது இடத்தில் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இரண்டு பிரிவுகளின் மீது நடிகர் ஜெய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.மேலும் இன்று அதிகாலை நடந்த விபத்திற்குபின், அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே மட்டையாகி உள்ளனர்.நெடுநேரம் ஆகியும் வெளிவராததால், சோதனை செய்த போலீசார், அவர்கள் இருவரையும் வெளியில் இழுத்து வந்து போலிஸ் காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்