ivanjalin liked to stay back in chennai

ரஷ்ய சுற்றுலா பயணிக்கு "சென்னையில்" இப்படி ஒரு ஆசையா.....? மிரண்டு போன தூதரகம்...!

ரஷ்ய சுற்றுலா பயணியான இவாஞ்சலின் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளார். பல இடங்களை சுற்றி பார்த்த இவருக்கு ரொம்ப பிடித்தமான மாநிலமாகவும், பிடித்தமான இடமாகவும் மாறியது சென்னை.

சில நாட்களுக்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்து வந்தார் இந்த சுற்றுலா பயணி.இதனை படம் பிடித்த மீடியாக்கள், இந்த செய்தியை மக்கள் மத்தியில் பிரபலம் செய்வதற்கு முன்னதாகவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு தெரிய வந்தது.

சொல்லப்போனால், ஏ.டி.எம்.ல் பணம் வராத நிலையில் தான் முதலில் இவர் பிச்சை எடுப்பதை தொடங்கியுள்ளார்.இப்போது அதுவே பழகி விடவே, அவருக்கு தமிழக மக்களிடம் மவுசு கூடி உள்ளது.

பிச்சை எடுப்பதில் கொஞ்சம் பணமும் பார்க்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த இவாஞ்சலின், தி நகரில் பல இடங்களில் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், இவருடைய மனநிலை நார்மலாகத்தான் உள்ளது என்றும், ஏதோ தெரியவில்லை .... அவருக்கு சென்னையில் பிச்சை எடுக்கவே அதிகமாக ஆசை உள்ளது என தெரிவித்துள்ளாராம். மேலும் இவருக்கு ரஷ்யாவிற்கு மீண்டும் செல்ல விருப்பம் இல்லையாம்.

இதனை அறிந்த போலீசார் தற்போது ஒரு வழியாக அவருடைய நண்பரிடம், இவான்சலினை ஒப்படைத்து விட்டனர்.

அவரது இந்திய விசா வரும் நவம்பர் மாதம் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இவர் வேறு எங்கு பிச்சை எடுக்க போகிறாரோ என்ற ஆவல் எழுந்துள்ளது