Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக்கில் புத்தாண்டு கலெக்சன்; 11 கோடியே 60 இலட்சம்…

itll collection-in-the-new-year-11-million-to-60-millio
Author
First Published Jan 2, 2017, 8:35 AM IST


சேலம்,

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.11 கோடியே 60 இலட்சத்துக்கு மதுவிற்பனை கல்லா கட்டியது.

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 2017 புத்தாண்டை வரவேற்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இளைஞர்கள், கார்களிலும் மோட்டார் சைக்கிளிலும் சாலைகளில் சென்று புத்தாண்டு வாழ்த்து சொல்லி கொண்டாடினர்.

மதுவெறியர்களோ நண்பர்களோடு டாஸ்மாக் கடையை நோக்கி பாய்ந்தனர். இதனால் கடைகளில் மாலை நேரத்தில் இருந்து கடை அடைக்கும் நேரம் வரை கூட்டம் அலைமோதியது.

மதுவெறியர்களோ தங்களது விருப்பமான மதுவகைகளை வாங்கி நண்பர்களுடன் அருந்தி புதிய வருடத்தை கூட அளவுக்கு அதிகமான மது குடித்து வரவேற்றனர்.

இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடிவிடுவார்கள் என்பதால் ஒருசிலர் கூடுதலாக மதுவகைகளை வாங்கி வைத்து நள்ளிரவு 12 மணி வரை மது அருந்தினர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள், “சேலம் மாவட்டத்தில் 250–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பண்டிகை காலங்கள் மற்றும் திருமண நாட்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும். புத்தாண்டு பிறப்பு என்பதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாகவே இருந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் பிராந்தி வகை 8 ஆயிரத்து 685 பெட்டியும், பீர் வகை 4 ஆயிரத்து 258 பெட்டியும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 கோடியே 95 இலட்சத்து 40 ஆயிரத்து 112–க்கு மது வகைகள் விற்பனையானது.

கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 கோடியே 95 இலட்சத்துக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக ரூ.2 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 227 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மது வகைகள் விற்பனையானது.

கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டுக்கு ரூ.2 கோடியே 60 இலட்சத்துக்கு மது வகைகள் விற்பனையானது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.40 இலட்சத்துக்கு மது வகைகள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரூ.1.60 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.40 இலட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 90–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 1 கோடியே 65 இலட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் மட்டும் ரூ.11 கோடியே 60 இலட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் விற்பனை இந்த வருடம் செம்ம கலெக்சன் என்று தெரிவிக்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios