விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்.!எத்தனை நாட்கள் நடைபெறுகிறது தெரியுமா.?

தமிழக சட்டப்பேரவை 20 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு 8 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 
 

It has been decided that the grant request meeting will be held for 8 days in the Tamil Nadu Legislative Assembly KAK

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையோடு நடைபெற்றது. இதனையடுத்து தமிழக பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மானிய கோரிக்கை தாக்கல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் படி வருகிற 24ஆம் தேதி மானிய கோரிக்கைக்கான கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முன் கூட்டியே மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி ஜூன் 20ஆம் தேதி மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கவுள்ளது. இந்தநிலையில் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,  20ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அன்றைய தினம் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.  விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்படும் என கூறினார். 21 ஆம் தேதி மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று தெரிவித்த அப்பாவு, அன்றைய தினம் முதல் தமிழக சட்டப்பேரவை காலை மாலை இருவேளைகளில் நடைபெறும் என்று குறிப்பிட்டார் 

கர்நாடகா காங்கிரசை கண்டிக்க முடியாத ஸ்டாலின்! மேடைக்கு மேடை மாநில உரிமைகளை பற்றி பேச வந்துட்டாரு! TTV.தினகரன்!

மானிய கோரிக்கை தேதி என்ன.?

21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீர்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை, வீட்டு வசதி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை, சுற்றுச்சூழல் துறை மாற்றுத்திறனாளிகள் துறை சமூக நலத்துறை மீதான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார். 22 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை மீதான விவாதங்கள் நடைபெறும் என்று குறிப்பிட்டார். 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 24ம் தேதி உயர் கல்வி, வருவாய் பள்ளிக்கல்வித்துறை. செய்தித்துறை. உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

அதேபோல 25 26 27 28 ஆகிய தேதிகளிலும் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 29ஆம் தேதி  முதலமைச்சரின் துறைகளான காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மீதான, உள்துறை மீதான விவாதம் வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை குறைவான நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதாக எழுப்பிய கேள்விக்கு,

Amit Shah : அண்ணாமலையுடன் மோதல்..! தமிழிசையை நேரடியாக எச்சரித்த அமித்ஷா?

காலை - மாலை வேளைகளில் சட்டசபை கூட்டம்

விக்கிரவாண்டி தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் 29ஆம் தேதி வரை நடத்தப்படுவதாகவும், 2004 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை ஆறு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு 14 சட்ட மசோதகள்  விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். காலை வேலைகளில் கேள்வி நேரம் இடம்பெறும் என்றும், அவை காலை 9.30 மணிக்கு கூடிய 1:30 மணி வரை நடைபெறும் என்றும், மாலை 5 மணிக்கு கூடி  இரவு 8 மணி வரை  அவை செயல்படும் என்றும் சபாநாயகர் சபாநாயகர் அறிவித்துள்ளார்‌
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios