மழை பாதிப்பு..! சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளிகள் இயங்குமா.? மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பரவலாக மழை
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் வேலூர் பகுதியில் மழையானது பெய்து வருகிறது. இதானல் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.
சென்னையில் பள்ளிகள் இயங்குமா.?
இதே போல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையானது பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறுகையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.