Isha : ஈஷாவின் காவேரி கூக்குரல் முன்னெடுப்பு.. கன்னியாகுமரியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்!

Isha Foundation : ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Isha Foundation Kauvery Kukural plan to plant 1 lakh saplings minister mano thangaraj started the initiative ans

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.  உலக  சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் அமைச்சர் திரு. மனோ தங்க ராஜ் அவர்கள் முதல் மரக்கன்றை VJ ஹெல்த் கேர் ஜஸ்டின் அவர்களுக்கு வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.

Karunas : சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் - அடுத்து நடந்தது என்ன?

ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

Isha Foundation Kauvery Kukural plan to plant 1 lakh saplings minister mano thangaraj started the initiative ans

மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Rain Alert : தமிழகம்.. நாளை பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - 14 மாவட்டங்களின் வெதர் ரிப்போர்ட் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios