isakkimuththu body finished post moderm in government hospital

நெல்லையில் கந்துவட்டியால் தீக்குளித்து உயிரிழந்த இசக்கிமுத்துவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தனர். 
கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வந்தார்.

இந்நிலையில், உயிருக்கு போராடி வந்த இசக்கி முத்துவும் இன்று உயிரிழந்தார். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இசக்கி முத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரது உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.