"கள்ளக்காதல் தவறில்லை"  என்ற தலைப்பே...தவாறான தலைப்பு....!

உச்சநீதிமன்றம் எந்த வழக்கில் இந்த தீர்ப்பை கொடுத்தது..? எதற்காக இந்த தீர்ப்பை வழங்கியது என்ற புரிதல் கூட இல்லாமல்...அறுத்து விட்ட கோழி  மாதிரி துடிக்கின்றனர் பலர்...."கள்ளக்காதல் தவறில்லை...கள்ளக் காதல் தவறில்லை என்று...

உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானது...மக்கள் மத்தியில் அதற்குண்டான புரிதல் மட்டுமே தவறானது......

உதாரணம்:

நல்ல ஒழுக்கம் உள்ள நபர்கள், உச்ச நீதிமன்ற  தீர்ப்பை நன்கு   புரிந்துக்கொள்வார்கள் என்பதில் மாற்றம் இல்லை....

உச்சநீதிமன்றமே தீர்ப்பை வழங்கி விட்டது பின், ... இதுவரை சற்று பயந்து ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்ன பிரச்சனை வருமோ என்ற சிந்தனை கொண்டவர்கள் கூட இனி தைரியமாக கள்ளக்காதல் தவறில்லை என்று கூறி  விட்டு தவறான உறவுகளை வைத்துக்கொள்ள முற்படுவார்கள் என்பது உண்மையான விஷயம...

ஆணுக்கு பெண் சமம்...! 

ஆணுக்கு பெண் எல்லா விதத்திலும் சமம் என்பதை நிரூபணம் செய்யும் விதத்தில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்று பலர் வரவேற்பு தெரிவிக்கின்றனர் 

அதாவது முன்பெல்லாம், தன் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் கணவர் தகாத உறவில்  ஈடுபடும் போது, குடும்ப வாழ்கையில் விரிசல் ஏற்படுகிறது.

ஆனால் அப்படி ஒரு கள்ளக்காதல் எதற்காக ஏற்படுகிறது..? அதன் பின் உள்ள சில பல காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்தால் தான் உண்மை புரியும்.


இந்த சமயத்தில் இது போன்ற கள்ளத்தொடர்பில், குடும்பத்தில் பாதிப்பு மற்றும்  உயிர் பலி வாங்கும் நிலைக்கு தள்ளப்படும் போது, தவறு செய்த ஆணிற்கு  மட்டுமே தண்டனை வழங்குவது வாடிக்கையாக இருந்தது.

ஆனால், தற்போது  வெளியாகி  உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஆணோ பெண்ணோ இருவரும் விருப்பப்பட்டு உறவு கொண்டால் அது தவறில்லை என்கிறது... அதே வேளையில் இதனால் மற்றவர்களுக்கு பல பிரச்சனை ஏற்படும் தருவாயில் அது தண்டனைக்குரிதாகிறது. இந்த தருணத்தில் தவறு இழைத்த அந்த  ஆணுக்கும் பெண்ணுக்கும் தண்டனை உண்டு என்கிறது தீர்ப்பு.


ஆனால் நம் மக்களோ....கள்ளக்காதல் தவறில்லை என்று....தவறாக புரிந்துக் கொண்டு, இஷ்டம் போல வழித்தவறி செல்வது மிகவும் தவறான ஒன்றே...