Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்திற்கு மிக அருகில் நிற்கும் சீன உளவு கப்பல்.! ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5  இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு அருகில் உள்ள ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 
 

Intensive surveillance in Rameswaram waters after Chinese spy ship docked in Sri Lanka
Author
Rameswaram, First Published Aug 17, 2022, 10:11 AM IST

இலங்கையில் சீனா உளவு கப்பல்

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ள சீனா திட்டமிட்டு அனுமதி கேட்டது. இதற்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக முதலில் மறுப்பு தெரிவித்த இலங்கை பின்னர் அனுமதி அளித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நேற்று நங்கூரமிட்டது. யுவான் வாங்க் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற பெயர்களில் 7 உளவு கப்பல்கள் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன. ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள யுவான் வாங் 5. கப்பலால் 750 கிலோ மீட்டர் தூரத்தை கண்காணிக்க முடியும்.  தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தொடங்கி, கேரளா, ஆந்திரா வரை உளவு பார்க்க முடியும்.  இந்தநிலையில் தான் இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி மாயமான ராணுவ வீரர்கள்... 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் உடல் கண்டெடுப்பு!!

Intensive surveillance in Rameswaram waters after Chinese spy ship docked in Sri Lanka

தீவிர கண்காணிப்பபில் தமிழக கடற்பகுதி

ராமேஸ்வரத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் ஹம்பந்தோட்டை துறைமுகம் உள்ளதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகொப்டர்கள் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

வெளிநாட்டில் முதலீடு.? நெருக்கும் அமலாக்கத்துறை..! முதலமைச்சர் திடீர் டெல்லி பயணம்.. திகில் கிளப்பும் சவுக்கு

 

Follow Us:
Download App:
  • android
  • ios