வெளிநாட்டில் முதலீடு.? நெருக்கும் அமலாக்கத்துறை..! முதலமைச்சர் திடீர் டெல்லி பயணம்.. திகில் கிளப்பும் சவுக்கு
வெளிநாட்டில் முதலீடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்த இருப்பதாக வந்த தகவலையடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டதாக அரசியல் விமர்சகரும், யூடூயுப்பருமான சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். இதனையடுத்து குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒலிம்பியாட் செஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டி துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்பட்டது.
15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை.. காவலர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
குடியரசு தலைவரை சந்திக்கும் முதலமைச்சர்
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்டதற்கு பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி கூறுவார் என தகவல் வெளியானது. இந்த நிலையில், அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சரின் டெல்லி பயணம் மர்மமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க செல்கிறார் என அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் முதலீடு..?
இருந்த போதும் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்த மற்ற மாநில முதல்வர்கள் கூட அவரை சந்திக்கவில்லையென தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வெளிநாடுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
மேலும் துபாயில் இருந்து லுலு குழுமம் மூலம் 6100 கோடி ரூபாய் இந்தியாவிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைகள் காரணமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் அவசரமாக அமைக்கப்பட்டதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரின் இந்த புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
பாஜகவுடன் குறைந்த பட்ச சமரசம் கூட செய்ய மாட்டோம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!!