Asianet News TamilAsianet News Tamil

15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை.. காவலர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

காவல்துறையின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

15 days leave for police inspectors tn govt has issued an order
Author
First Published Aug 16, 2022, 9:38 PM IST

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும்போது, போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து, தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும்.

15 days leave for police inspectors tn govt has issued an order

மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

இதன் மூலம் 10 ஆயிரத்து 508 பேர் பயனடைவார்கள் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்பட்டு வருவதைப்போல, அதே பலன்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்திருந்தார். 

மேலும் செய்திகளுக்கு..“என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக்

15 days leave for police inspectors tn govt has issued an order

அரசு இதை விரிவாக ஆராய்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடுத்த, முன்மொழிவினை ஏற்றுக்கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான திருத்தங்கள் அளிப்பதற்கு, போலீஸ் நிலை ஆணை தனியாக வெளியிடப்படும்’ என்றும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“போதையில்லா தமிழகம்.. டாஸ்மாக் வசூல் 273 கோடி !” திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை!

Follow Us:
Download App:
  • android
  • ios