திருவள்ளூர்

காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி, பொன்னேரியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யாவிட்டால், வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 13 இலட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்று, மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் எனத் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.