Asianet News TamilAsianet News Tamil

ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. இந்த ஆண்டிற்கான நல்லாளுமை விருது பெற்றவர்கள் விவரம்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். விருதுடன் அளிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துடன், தன்னுடைய நிதியான ரூ.5 ஆயிரத்தையும் அவர் அரசுக்கு வழங்கினார்.
 

Independence Day Award 2022 Details
Author
Chennai, First Published Aug 15, 2022, 9:56 AM IST

சுதந்திர தினத்தையொட்டி 2022 ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். 

விருதுடன் அளிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துடன், தன்னுடைய நிதியான ரூ.5 ஆயிரத்தையும் அவர் அரசுக்கு வழங்கினார். அதே போல் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது முனைவர் இஞ்ஞாசி முத்துவுக்கு வழங்கப்பட்டது. நாகை கீழ்வேளூர் சேர்ந்த எழிலரசிக்கு துணிவு , சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. குளத்தில் முழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய செயலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:சிறந்த மாநகராட்சி விருதை சேலம் தட்டி சென்றது.. 2022 ஆண்டிற்கான சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது..

உங்கள் தொகுதியில் முதல்வர் விருது லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்பட்டது. மாற்றுதிறனாளி சேவைகளுக்கான விருது உதகை அரசு மருத்துவமனை மருத்துவர், ஜெய்கணேஷ்மூர்த்திக்கு வழங்கப்பட்டது. மாற்றுதிறனாளி நலனுக்காக பணியாற்றிய அமுதசாந்திக்கு சிறந்த சமூக பணியாளர் விருது வழங்கப்பட்டது

மாற்றுதிறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த டாஃபே ரிஹாப் செண்டர் நிறுவனத்திக்கு விருது வழங்கப்பட்டது.அறிவு சார் குறைவுடையவர்களுக்கான சிறப்பு பள்ளியை நடத்தும் ரெனேசான்ஸ் அறகட்டளைக்கு விருது வழங்கப்பட்டது. மகளிர் நலனுக்கான சிறந்த சேவையாற்றிய வானவில் அறகட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.

அதே போல் செங்கல் சூளை கொத்தடிமைகளை தொழில்முனைவோராக மாற்றியதற்கான திருவள்ளூர் ஆட்சியருக்கு  விருது வழங்கப்பட்டது. அதே போல் நெல்லை, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கும் நல்லாளுமை விருது வழங்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர், வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது. சிவகங்கையில் நீர் நிலைகளை மீட்ட மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:Tamil Nadu DA allowances 2022 : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு!!

தாய்கேர் நெல்லை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கும் விருது வழங்கப்பட்டது. முதலமைச்சர் மாநில இளைஞர் விருது விஜயகுமார் , முகமது ஆசிக், வேலூர் ஸ்ரீகாந்த, சிவரஞ்சினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios