2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியை உயர்த்தி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உழவர் பாாதுகாப்புத் திட்டத்தில் சிறு, குறு உழவர்கள், வேளாாண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதியோர் ஓய்வூதியத் தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை விபத்து நிவாரணத் தொகை இறுதிச்சடங்கு நிவாரணத்தொகை கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.
வேளாண்மையை நம்பியுள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சாகுபடிக்காலங்களில் கிடைக்கும் பணிகளைப் பொறுத்தே அமைகிறது. இயற்கைப் பேரிடர்களால் பயிர் சாகுபடி பாதிக்கும் போது உழவர்களுடன் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும், விபத்தினாால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும், இயற்கை மரணத்துக்கான நிதி உதவி, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி, 2,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் விளிம்பு நிலையிலுள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் குடும்ப நலன் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
