தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு உட்பட 13 இடங்களில் வருமானவரித்துரையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் நடத்திய சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு என்று கூறப்படுகிறது. 

ரெய்டுக்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாம். ராம் மோகன் ராவ் தனது தம்பி சீனிவாச ராவ், மச்சான் ஹரிபாபு மற்றும் அவரது மகன் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த தகவல்கள அனைத்தையும் திரட்டிய வருமான வரித்துறையினர் 13 இடங்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர பத்மாவதி எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனத்திலும் ரெய்டு நடக்கிறது. இந்த நிறுவனம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என்று கூறுகின்றனர்.