Asianet News TamilAsianet News Tamil

Raid : பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் ‘திடீர்’ ஐடி ரெய்டு.. எதற்கு தெரியுமா ?

Coimbatore : கோவை வடவள்ளியில் செயல்படும் பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Income tax officials are conducting raids on popular Anandas Group restaurants operating in Vadavalli Coimbatore
Author
First Published May 28, 2022, 10:48 AM IST

கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்கிறது. 

Income tax officials are conducting raids on popular Anandas Group restaurants operating in Vadavalli Coimbatore

மேலும் அனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சுந்தராபுரம், சாய்பாபா காலனி, நீலம்பூரில் உள்ள ஆனந்தாஸ் குழும இனிப்பகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 4 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஆனந்தாஸ் உணவாக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

Follow Us:
Download App:
  • android
  • ios