தமிழகத்தில் மீண்டும் களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..! எந்த எந்த இடங்களில் சோதனை.? யாருக்கு ஸ்கெட்ச் .?

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வீடு, மண்ணடியில் தொழிலதிபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Income Tax department raids the homes of businessmen in Chennai KAK

தொடரும் சோதனை

வரி ஏய்ப்பு புகார் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறையானது சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, மணல் குவாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனர்கள், வீடு கட்டுமான நிறுவனர்கள், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அமைச்சர் எ.வ .வேலுவின் வீடுகளில் சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது.

Income Tax department raids the homes of businessmen in Chennai KAK

தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை

இந்தநிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனையை தொடங்கியுள்ளது. கோபாலபுரத்தில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வினோத் கிருஷ்ணா என்பவரது வீடு, வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் அவரது அலுவலகம்,  சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின்  வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது பெங்களூரு, கொச்சியில் உள்ள வழக்குத் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு.. எந்த காரணமும் கூறாமல் திடீரென விலகிய நீதிபதி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios