In the case of the case Amruta questioned why the genetic test should not be ordered.

ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் மனுவில் தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன் எனவும் ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என தன்னை அறிவிக்கக்கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு மூத்த நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் தான் என்று வழக்கறிஞர் பிரகாஷ் வாதாடினார். விளம்பரத்துக்காக அம்ருதா வழக்கு தொடுக்கவில்லை எனவும் வாதிட்டார். 

இதனிடையே பேசிய நீதிபதி அம்ருதா தொடர்ந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் ஆயிரம் பேர் இதுபோன்று வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.