In the appointment of the Vice Chancellor of millions - evks again balm

சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி நியமனத்துக்கு லஞ்சமாக ரூ.50 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாங்கியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டிசம்பர் 31, 2010 முதல் ஜூலை 31, 2012 வரை இருந்தவர் ராஜாராம்.

திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஓருங்கிணைக்கப்பட்டவுடன் இவர் கோவையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், கம்ப்யூட்டர் மொழிகள், ஹை வோல்டேஜ் என்ஜினீயரிங் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் எழுதிய கட்டுரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், சென்னை அயனவரத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 50 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜாராம், கல்லூரிகளில் பணம் வசூல் செய்தார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக ராஜாராமிடம் ரூ.50 கோடி லஞ்சமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாங்கியுள்ளார்.

இந்த துணைவேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளது.

ஊழலில் திளைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசை அகற்ற வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.