போலியோ சொட்டு மருத்து முகாம் எப்போ தெரியுமா.? எத்தனை வயது குழந்தைகளுக்கு செலுத்தலாம்.? தமிழக அரசு அறிவிப்பு

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் எனவும்,  அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

In Tamil Nadu a polio drip camp will be held on March 3 KAK

போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (03.03.2024) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் எத்தனை வயது குழந்தை வரை சொட்டு மருந்து செலுத்திக்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும், சொட்டு மருத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள எழுந்துள்ள கேள்விக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ள அதில், 
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 57.84இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

 

In Tamil Nadu a polio drip camp will be held on March 3 KAK

சொட்டு மருந்து முக்கிய அம்சங்கள்:

1. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

3. தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

4. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

5. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

 

In Tamil Nadu a polio drip camp will be held on March 3 KAK

குழந்தையின் கையில் மை

6. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழர் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் 2/2 ம்

7. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

8. புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

9. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

10. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள். இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

In Tamil Nadu a polio drip camp will be held on March 3 KAK

போலியோ இல்லாத தமிழகம்

12. போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கண்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

13. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

குறைந்தது வெண்டைக்காய், பீன்ஸ் விலை.! தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கும் கேரட் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios