IAS pradap murufan top ranker
UPSC எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த பிரதாப்முருகன், அகில இந்திய அளவில் 21வது இடத்தையும், தமிழகத்தில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்த பிரதாப் முருகனின் பெற்றோர் செய்து வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை வத்திராயிருப்பில் உள்ள லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்த பிரதாப் முருகன்,
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை திருநெல்வேலியில் உள்ள ரோஸ்மேரி பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை மதுரை டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் படித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில பி.டெக்., கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.
பின்னர் டெல்லியில் உள்ள வஜ்ரம் இன்ஸ்டிட்யூட்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெற்று,தற்போது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்துள்ளார்.சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
விவசாய குடும்பத்திலிருந்து வந்தாலும், ஐ.ஏ.எஸ்., ஆவதே ஒரே நோக்கமாக கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக முயற்சி செய்தார். பல்வேறு நிறுவன்ங்களில் பல லட்ச ரூபாய் சம்பளத்தில், நல்ல வேலைவாய்ப்புகள் வந்தும், அவை அனைத்தையும் உதறிவிட்டு ஐஏஎஸ் ஆவதே தனது லட்சியம் என கொண்டு தீவிர பயிற்சி பெற்று தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் தனது பெற்றோரே என பிரதாப் முருகன் தெரிவித்துள்ளார்.
வத்ராயிருப்பில் உள்ள பிரதாப் முருகனின் பெற்றோருக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
