Asianet News TamilAsianet News Tamil

ஜனநாயகத்தில் கண்டிக்க, கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி

In a democracy condemn say the concept is right for everyone
in a-democracy-condemn-say-the-concept-is-right-for-eve
Author
First Published Apr 15, 2017, 10:05 PM IST


புதுச்சேரியில் அரசுக்கும் அரசியலுக்கும் இடையே கடும் போட்டியும் மோதலும் நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரன்பேடிக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

கிரண்பேடியின் வேலைபாடுகள் சரியில்லை என அமைச்சர்களும், இணைந்து செயல்பட அமைச்சர்கள் மறுப்பதாக கிரண்பேடியும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறன்றனர்.

இதனால் புதுச்சேரியில் பல்வேறு செயல்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி கூறியதாவது:

புதுச்சேரி மக்கள் திசை திருப்ப பட்டுள்ளனர்.

நான் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன்.

என்னை கண்டிப்பதையும் எனக்கு எதிராக கருத்து சொல்வதையும் நான் ஏற்கிறேன்.

ஜனநாயகத்தில் கண்டிக்க, கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது.

புதுச்சேரி அரசியல் சூழ்நிலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios