கணவருடன் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்ற பெண், பள்ளி பருவத்து காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. இளம் பெண்ணின் காதல் விளையாட்டால் இரண்டு பேரின் வாழ்க்கை கேள்விக்குறியானது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த இளம் பெண் சமீதா (18). இவருக்கும் சாலை நகரைச் சேர்ந்த உறவினர் சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. 

திருத்தணி முருகன் கோயிலில் அவர்களது திருமணம் நடந்தது. திருமணத்தின்போதே போட்டோ எடுப்பதில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிறகு சமரசமான நிலையில், இதையே காரணம் காட்டி சமீதா சில மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து, மனைவியின் வீட்டுக்கு சக்திவேல் சென்றுள்ளார். மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து செல்லும் நோக்கோடு சென்றுள்ளார்.

ஆனால், சக்திவேலுடன் கோபமாக இருப்பதாக கூறிய சமீதா, உடன் வர மறுத்துள்ளார். மனைவியுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திவேல், திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது, மனைவி சமீதா கழுத்தில் புது தாலியுடன், வேறொரு இளைஞருடன் கணவன் - மனைவியாக செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களைச் பின் தொடர்ந்து சென்ற சக்திவேல், சமீதாவை மறித்து விசாரித்தார். அப்போது சமீதா கூறியதைக் கேட்டு சக்திவேல் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார். 

சமிதாவுடன் கிரிவலம் வந்தவர், பள்ளி பருவத்து காதலன் என்பதும், தற்போது புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மனைவி சமிதா, தன்னை விவாகரத்து செய்யாமல், வேறொரு திருமணம் செய்து கொண்டதாக கூறி, போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சமீதாவிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளி பருவத்தின்போதே காதல் திருவிளையாட்டில் சமீதா ஈடுபட்டு வந்தது அம்பலமாகியது. சமீதா 11 ஆம் வகுப்பு படிக்கும்போதே, கார்த்திகை காதலித்ததாகவும், அப்போதே இருவரும் எல்லைமீறியதால், சமீதா கர்ப்பமானதாகவும் விசாரணையில் வெளியானது. 

மேலும், கார்த்திக் தங்களைவிட குறைந்த சாதி என்பதால், சமீதாவின் கர்ப்பத்தை கலைத்த குடும்பத்தினர், பாதுகாப்பாக இருக்க உறவினர் சக்திவேல் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு மாதம் தங்கியிருந்த நிலையில், சக்திவேலுக்கும், சமீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர். இந்த நிலையில்தான், கணவர் சக்திவேலுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற சமீதா, பழைய காதலன் கார்த்திகை சந்தித்து, திருமணமும் செய்து கொண்டார். 

இதன் பிறகு, ஜோடியாக திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்துள்ளனர். அப்போதுதான், சக்திவேல் தங்களைப் பார்த்ததாக சமீதா போலீசாரிடம் கூறியுள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமீதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.