சற்றுமுன் தகவல்.. கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகும் சென்னை ஐஐடி.. இதுவரை 60 பேர் பாதிப்பு..
சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகள் அனைத்தையும் ஐஐடி மாணவர்கள் பின்பற்றுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகள் அனைத்தையும் ஐஐடி மாணவர்கள் பின்பற்றுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 25 க்கும் கீழ் குறைவாக இருந்த நிலையில் தற்போது 50க்கும் மேல் அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலளர் அறிவுறுத்துள்ளார்.
மேலும் கொரோனா பரிசோதனை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்தும் பணி வேகமடுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்துதல் போன்றவை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 8 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உஷார்..! மிரட்டும் கொரோனா.. இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கடுமையாக்குங்கள்.. ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்..
இதனிடையே பொதுமக்கள் அனைவரும் வெளியில் வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில் ஒருவருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கபடாததால், மக்கள் அலட்சியத்துடன் இருக்க கூடாது என்றும் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவத்துறை செயலர் கூறியுள்ளார்.
இச்சூழலில், ஐ ஐ டி வளாகத்தில் மொத்தமாக 1420 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன் தினம் வரை 30 பேர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சென்னை ஐஐடியில் கொரோனா பாதித்தவர்களில் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருந்தது. அனைவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே உள்ளது. இதனால ஐஐடி வாளாகத்திலே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகள் அனைத்தையும் ஐஐடி மாணவர்கள் பின்பற்றுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அலட்சியமா இருக்காதீங்க.. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்..? ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..