அலட்சியமா இருக்காதீங்க.. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்..? ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..
தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்இ கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்இ கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 25 க்கும் கீழ் குறைவாக பதிவான நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 50 க்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் முக கவசம், சமூக இடவெளியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் பொதுஇடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனால் பொது இடங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக்த்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதி தயார் நிலையில் வைத்திருக்கும் படி மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அனைத்து முதல்வர்களுடன் ஏப்ரல் 27ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர், அதிகாரிகளுடன் முதலாமைச்சர் ஆலோசணை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் சென்னை அருகே ஆவடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படாது என்பதால் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. எனவே முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: பரபரப்பு.. ! ஊரடங்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா..?