உஷார்..! மிரட்டும் கொரோனா.. இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கடுமையாக்குங்கள்.. ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்..

தமிழகத்தில் உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 
 

Health secretary Radhakrishnan wrote letter all district collectors for corona prevention action

தமிழகத்தில் உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள கடித்தத்தில்,” டெல்லி , ஹரியானா , உத்தரப் பிரசேதம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் அதிகரித்துவரும்  கொரோனா தொற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் கூடக் கூடிய இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்ன். 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் , முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி , மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரபடுத்த வேண்டும்.

மேலும் படிக்க: அலட்சியமா இருக்காதீங்க.. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்..? ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..

தேவையான நபர்களுக்கு பிசிஆர் கொரோனா பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல் வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்தல் , உருமாறும் ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்திட வேண்டும். குறிப்பாக பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

குறிப்பாக தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைந்துள்ள நிலையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாக குறைந்துவிட்டது. முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளி கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதலை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் தமிழகத்தில் 93 சதவீதம் ஒமைக்ரான் BA2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் , XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க: பரபரப்பு.. ! ஊரடங்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா..?

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படாது என்பதால் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. எனவே முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios