சொன்ன தொகை தரல.. மேடையில் முதல்வர் முன் காசோலையை திருப்பி கொடுத்த நபர்.. என்ன ஆச்சு? அண்ணாமலை சொன்ன தகவல்!

Annamalai Slams DMK : மீனவர்களுக்கு இழப்பீடு தொகை அளிக்கும் நிகழ்வு ஒன்றில், முதல்வரிடம் பெற்ற காசோலையை மேடையிலேயே திருப்பிக்கொடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

I urge DMK government must pay the promised compensation of 5 lakh bjp leader annamalai slams dmk ans

இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவோடு சில பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவு பின்வருமாறு.. 

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

வெள்ளம் வந்தபோது மீடியா மேனேஜ்மெண்ட் செய்த திமுக: சென்னையில் பிரதமர் மோடி ஆவேசம்

இந்த நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் சகோதரர் திரு.ரமேஷ் அவர்கள், விழா மேடையிலேயே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்துப் புகார் அளித்ததும், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்தததையும், விழா காணொளியில் காண முடிகிறது. 

இதனை அடுத்து, மீனவர், சகோதரர் திரு ரமேஷ் அவர்களை, அங்கேயிருந்த திமுகவினர் தாக்கியுள்ளதாகவும் இதனைப் பதிவு செய்த தனியார் செய்தித் தொலைக்காட்சியின் காணொளிகளும், திமுகவினரால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்தியில், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக.

உடனடியாக, மீனவர் திரு. ரமேஷ் அவர்களைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார். 

எங்களிடம் எம்.பி.கள் இருந்திருந்தால்! நிதியை குடுத்துட்டு தமிழ்நாட்டுக்குள்ள வாங்கனு சொல்லிருப்போம் - அதிமுக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios