ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும், தான் நலமாக இருப்பதாக நடிகர் விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் சில வாரங்களில் ரசிகர்களைச் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.

நடிகராகவும், நடிகர் சங்க பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இரும்புத்திரை, சண்டக்கோழி - 2 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

இந்த நிலையில், நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார் நடிகர் விஷால், அவன் இவன் படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்ததில் இருந்து விஷாலுக்கு தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாறிவாளன் படத்தில் சண்டைக்காட்சியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அது முதல் தலைவாலியாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இதற்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. நண்பர்கள், ரசிகர்கள், நலம் விரும்புகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான்
ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும், நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் உங்களைச் சந்திப்பேன் என்று அதில் பதிவிட்டுள்ளார்.