Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ள ஹூண்டாய்! நாளை கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

Hyundai to invest Rs 15,000 crore in Tamil Nadu! MoU to be signed tomorrow
Author
First Published May 10, 2023, 10:18 AM IST

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தனது அடுத்த கட்ட மெகா முதலீட்டை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.தென் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே, ரூ.15,000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்திடுகிறது. இது மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“ரூ. 15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி” வரையிலான முதலீடுகள் அடுத்த 7-10 ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இதுவரை நாட்டில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முழுமையான ஒருங்கிணைந்த உற்பத்தி தொழிற்சாலை 740,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்தியாவிலிருந்து பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாகவும் உள்ளது.

இதையும் படிங்க : T.R.B.Rajaa: 3 முறை எம்.எல்.ஏ.. திமுக ஐடி விங்கின் ‘மாஸ்டர் மைண்ட்’ - யார் இந்த டி.ஆர்.பி ராஜா?

2022-ல், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 7,00,811 யூனிட்டுகளாக இருந்தது . இது 2021 நடந்த  விற்பனையை விட 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த ஆண்டில் ரூ. 47,043 கோடி செயல்பாட்டு வருவாயைப் பதிவுசெய்துள்ளது, இது 2021-ல் ரூ.42,410 கோடியாக இருந்தது.

இதனிடையே கடந்த மாதம்,  ஹூண்டாய் மோட்டார், கியா ஒருங்கிணைந்த விற்பனை மூலம் 2030 ஆம் ஆண்டில் உலகளாவிய  மின்சார் கார்களின் எண்ணிக்கையை அளவை 3.64 மில்லியன் யூனிட்டுகளாக "குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதாக" அறிவித்தது.

இந்தியாவில் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதால், இந்தியாவில் பயணிகள் வாகனப் பிரிவில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது மெதுவாக அதிகரித்து வருகிறது.

தற்போது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் ஊடுருவல் 2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 40,000 க்கும் மேற்பட்ட மின்சார PVகள் (மின்சார கார்கள் மற்றும் SUV கள் உட்பட) டாடா மோட்டார்ஸ் மொத்த அளவுகளில் 80 சதவீத பங்கைப் பெற்றுள்ளது. தற்போது, ஹூண்டாய் நிறுவனம் கோனா என்ற எலக்ட்ரிக் கார் மற்றும் அனைத்து எலக்ட்ரிக் எஸ்யூவியான ஐயோனிக் 5ஐ பிரீமியம் வகைகளில் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க : கண்ணின் இமை போல டெல்டா மாவட்டங்களை முதல்வர் பாதுகாத்து வருகிறார் - அமைச்சர் மெய்யநாதன்

Follow Us:
Download App:
  • android
  • ios