Asianet News TamilAsianet News Tamil

மனைவியை கொடூரமாக கொன்று நாடகமாடிய பூசாரி! அம்பலமானது காதல் கணவனின் வக்கிரம்...

Husband arrested for killed his wife in Vadapalani
Husband arrested for killed his wife in Vadapalani
Author
First Published Apr 9, 2018, 11:57 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


நண்பரின் உதவியுடன் மனைவி ஞானப்பிரியாவை கொடூரமாக கொலை செய்துவிட்டு குருக்கள் பாலகணேஷ் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகணேஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஞானபிரியா என்பவரை காதலித்து திருமணம்  செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பாலகணேஷ் சென்னை வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாக இருக்கிறார்.

Husband arrested for killed his wife in Vadapalani

வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் கணவன்  மனைவி அவர் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரும் தட்சணை பணம் வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணிக்கு வீட்டின் உரிமையாளர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது பாலகணேஷ் கை கால்கள்  துணியால் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாக கழிவறையில் கிடந்தார். இதை பார்த்த விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்து பாலகணேஷ் மனைவி  ஞானபிரியாவுக்கு சொல்ல அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு முன்பக்கம் மூடப்பட்டிருந்தது. உடனே பதற்றத்தில்  விஜயலட்சமி கதவை திறந்து உள்ளே பார்த்த போது, படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் ஞானபிரியாவும் கை மற்றும் கால்கள் கயிறால்  கட்டப்பட்ட நிலையில் தலையில் காயங்களுடன் கிடந்தார்.

Husband arrested for killed his wife in Vadapalani

இதுகுறித்து உரிமையாளர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தனர். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் ஞானபிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான  நிலையில் கழிவறையில் கிடந்த பாலகணேசை மீட்டு சிகிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஞானபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் சிவன் கோயில்  தெரு முனை வரை ஓடி நின்றது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,  தம்பதி தனியாக வசித்து வருவதை தெரிந்த நபர்கள்  தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டிய போது பாலகணேஷ் கதவை திறந்துள்ளார். அப்போது  அதிரடியாக உள்ளே புகுந்த கும்பல் பாலகணேசை துணியால் கை மற்றும் கால்களை கட்டி விட்டு அவரது மனைவி ஞானபிரியாவை கயிற்றால் கை  மற்றும் கால்களை கட்டியுள்ளனர். உடனே ஞானபிரியா திருடன் திருடன் என பலமாக சத்தம்போட்டுள்ளதாக தெரிகிறது.

Husband arrested for killed his wife in Vadapalani

இதனால் கொள்ளையர்கள் ஞானபிரியாவை வாயை பொத்தி அவரது தலையை தரையில் கடுமையாக மோதி மண்டையை உடைந்துள்ளனர். இதனால்  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பிறகு அவரது கழுத்தில் இருந்த நகைகளை பறித்துள்ளனர். அப்போது காதல் மனைவியை  கண்முன்பே அடித்து கொலை செய்ததை பார்த்த பாலகணேஷ் வலிப்பு ஏற்பட்டு மயங்கிவிட்டார். உடனே கொள்ளையர்கள் பால கணேஷ் இறந்து  விட்டதாக நினைத்து அவரை வீட்டில் இருந்து தூக்கி வந்து வெளியே உள்ள கழிவறையில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை நகைக்காக நடந்ததாக தெரியவில்லை. காரணம் பாலகணேஷ் ரூ.3500 வாடகையில் தான் வசித்து வருகிறார்.  பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்து இருந்தாலும், இவர்களை பார்க்க பெற்றோர்கள் யாரும் சரியாக வரவில்லை என்றும், கணவன்  மனைவிக்கும் இடையே இதுவரை எந்த சண்டையும் ஏற்பட்டதில்லை என்றும் அருகில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.

பாலகணேஷ் வடபழனி சிவன்  கோயிலில் குருக்களாக இருப்பதால் வேறு ஏதேனும் காரணமா என கோயிலில் பணியாற்றும் மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த  கொலையில் மர்மங்கள் பல இருப்பதால் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் 5 தனிப்படைகள்  அமைத்து தேடிவருகின்றனர். பாலகணேஷ் மற்றும் இறந்த ஞானபிரியா செல்போன்களை பெற்று ஒரு வாரத்திற்கான அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Husband arrested for killed his wife in Vadapalani

இந்நிலையில் கொடூரமாக தாக்கப்பட்டு பலத்த காயங்களோடு இருந்த கணவர் பாலகணேஷ் கடந்த இரண்டு நாட்களாக  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் நேற்று அவர் கண்விழித்த நிலையில் அவரில்டம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கூறியதாவது, ‘‘நள்ளிரவு கதவு தட்டும் சத்தம் கேட்டு, நான் எழுந்து கதவை திறந்தேன். அப்போது என்னை இரும்பு கம்பியால் இருவர் அடித்தனர்.

உடனே என் கைகளை கட்டிய போது என் மீது சாமி வந்ததது போன்று இருந்தது. பின்னர் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியாது. காலையில் என்னை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது நினைவு திரும்பியதும் எனது மனைவி கொலை செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியும்’’ என்று கூறியுள்ளார். தலையில் பலமாக அடிப்பட்டுள்ளதால் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்து வருகிறார். இதனால் போலீசார் பாலகணேஷிடம் தொடர் விசாரணை நடத்தினால் தான், இந்த கொலை குறித்து முழு விபரமும் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

இதற்கு முன் ஞானபிரியா உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு ஞானபிரியாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மனைவியின் இறுதி சடங்கிற்கு பாலகணேஷை போலீசார் அழைத்து வந்த போலீசார் அவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Husband arrested for killed his wife in Vadapalani

அதில், தங்களுக்கு  திருமணமானதிலிருந்து குழந்தை இல்லாமல் இருந்ததால் விரக்தியில் இருந்த குருக்கள் பாலகணேஷ் வேறொரு திருமணம் செய்துகொள்ள ப்ளான் போட்டுள்ளார். இந்த விஷயம் தெரிந்த மனைவி கணவர் பால கணேஷை தட்டி கேட்டுள்ளதால் கோபமான கணவன் பாலகணேஷ் ஞானபிரியாவை கொள்ள பிளான் போட்டு தனது நண்பர்கள் உதவியுடன் கொலை செய்து தானும் கைகளை கட்டிக் கொண்டு கொள்ள கழிவறையில் கிடப்பது போல நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து குருக்கள் பாலகநேஷை வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios