MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரூ.1000 வரவில்லையா? மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த குட் நியூஸ்!

ரூ.1000 வரவில்லையா? மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த குட் நியூஸ்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரசு புதிய குறைதீர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் மாதம் ரூ.1000 பெற முடியும். இதன் முழுமையான தகவல்களை இங்கு காண்போம்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 02 2026, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : tndipr

மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாடு அரசு பெண்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் முக்கியமான திட்டங்களில் ஒன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம். கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், தகுதியுள்ள குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. வருகிறது. இந்த உதவி, குடும்ப செலவுகளை சமாளிக்க பல பெண்களுக்கு பெரிய ஆதரவாக இருந்து வருகிறது.

25
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
Image Credit : Google

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதிதாக லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 1.30 கோடி பெண்கள் மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர். இதே, எதிர்காலத்தில் இந்த தொகை உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தது பெண்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
ஏப்ரல் 1க்கு பிறகு சம்பளதாரர்களுக்கு ஆப்பு.. இந்த 14 முடிவுகள் உங்களை பாதிக்கும்.. உஷார்
Related image2
இந்த 10 அறிவிப்புகள் இந்தியாவை மாற்றப்போகுது.. பட்ஜெட் 2026-ன் முக்கிய அம்சங்கள்
35
உரிமைத் தொகை மேல்முறையீடு
Image Credit : x

உரிமைத் தொகை மேல்முறையீடு

ஆனால், இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பித்தும் சில தகுதியான பெண்களுக்கு இன்னும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு, எந்த தகுதி பெண்ணையும் விடுபடக் கூடாது என்பதற்காக அரசு புதிய குறைதீர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உதவித் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

45
உரிமைத் தொகை குறைதீர்வு
Image Credit : Google

உரிமைத் தொகை குறைதீர்வு

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், அருகிலுள்ள e-Sevai அல்லது CSC மையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது [www.kumt.in.gov.in](http://www.kumt.in.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘குறைதீர்வு / Grievance’ என்ற சேவையைத் தேர்வு செய்து ஆன்லைனிலேயே புகார் பதிவு செய்யலாம். இதில் விண்ணப்பித்தவர் பெயர், குடும்பத் தலைவர் பெயர், குடும்ப அட்டை எண், கைப்பேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்த பிறகு OTP வரும். அந்த OTP மூலம் உள்நுழைந்து ஆதார், ரேஷன் அட்டை, வங்கி விவரம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

55
மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு
Image Credit : Google

மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு

ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் இந்த மேல்முறையீடு, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் பரிசீலிக்கப்படும். தகுதி உறுதி செய்யப்பட்டால், உரிமைத் தொகை வழங்கப்படும். ஆனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த குறைதீர்வு முறையைப் பயன்படுத்த முடியும். ஒரே குடும்ப அட்டை எண் அல்லது கைப்பேசி எண்ணை பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு
அரசு திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி செல்வோம்.. ஆட்சி பீடத்தை வெல்வோம்.. TVK விஜய் கடிதம்
Recommended image2
அதிமுக தனிக்கட்சி அல்ல; பாஜகவின் கிளை அமைப்பு.. போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
Recommended image3
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்துக்கு பலன்.. வளர்ச்சி பாதையில் இந்தியா.. பாராட்டித் தள்ளிய இபிஎஸ்!
Related Stories
Recommended image1
ஏப்ரல் 1க்கு பிறகு சம்பளதாரர்களுக்கு ஆப்பு.. இந்த 14 முடிவுகள் உங்களை பாதிக்கும்.. உஷார்
Recommended image2
இந்த 10 அறிவிப்புகள் இந்தியாவை மாற்றப்போகுது.. பட்ஜெட் 2026-ன் முக்கிய அம்சங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved