அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு: எஃப்.ஐ.ஆர் கசிவுக்கு என்ன காரணம்?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்.ஐ.ஆர் கசிந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது. BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறும்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனையால் எஃப்.ஐ.ஆர் வெளியானதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How was the FIR in the Anna University student case leaked? National Informatics Centre explains sgb

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கான காரணத்தை தேசிய தகவல் மையம் விளக்கியுள்ளது.

அண்மையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த மாணவி ஒருவரிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. அதன் நகல் இணையத்தில் கசிந்தது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம். அதனை மீறி மாணவி பற்றிய தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் வகையில் எஃப்.ஐ.ஆர் நகல் கசிந்ததால் காவல்துறையினருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

50க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சமூக வலைதளங்களில் எஃப்.ஐ.ஆர். நகலைப் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீநிமன்றத்தில் நடந்த விசாரணையின்போதும் எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என்றும் அதை டவுன்லோட் செய்தவர்கள் யார் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே எஃப்.ஐ.ஆர். கசிந்துவிட்டது என்றும் காவல்துறை அதனை வெளியிடவில்லை என்றும் அரசு தரப்பில் பதில் கூறப்பட்டது. எஃப்.ஐ.ஆரை டவுன்லோட் செய்த 14 பேரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது. IPC குற்றவியல் சட்டத்தில் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகத்தான் எஃப்.ஐ.ஆர் கசிந்துவிட்டது என்று என்.ஐ.சி. கூறியுள்ளது. BNS சட்டத்தின் பிரிவுகளான 64, 67, 68, 70, 79 ஆகிய அனைத்துமே பெண்கள் வன்கொடுமை தொடர்பானவை என்றும், இந்தப் பிரிவுகளில் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆரை புகார் அளிப்பவர் மட்டுமே பார்க்க முடியும் என்றும் தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், மாநில குற்றப்பத்திரிகை காப்பகத்திற்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIP முதலீட்டில் ரூ.10,000 க்கு 19 லட்சம் கிடைக்கும்! டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios