how to releive from seven and half effects today itself

ஏழரை சனியிலிருந்து இப்பவே விடுபட இதை இன்றே செய்யுங்கள்...!

சனிபெயர்ச்சி இன்று நடைபெற்றதால்,பெரும்பாலான மக்கள் ஆவலுடன் கோவிலுக்கு சென்று சனிபகவானுக்கு விளக்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றுடன் ஏழரை சனி முடிவடைகிறது.

பச்சரிசியின் அற்புதம்

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து கையில் வைத்துக்கொள்ளுங்கள்.பின்னர் சூரிய நமஸ்காரம் செய்த பின்னர்,விநாயகரை வணங்குவது நல்லது

3 சுற்று

விநாயகரை மூன்று சுற்று சுற்றிய பின்னர்,கையில்உள்ள அரிசி மாவை சற்று கீழே போடவும்,இந்த அரிசி மாவை எறும்புகள் எடுத்து செல்லும்.

அப்படி தூக்கிச் சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டு போய்விடும் என்பது ஐதீகம்.இதனை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் மிகவும் நல்லது

ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனி பெயர்ச்சியினால் ஏற்படும் சில பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்

எப்படி இருக்க வேண்டும் தெரியுமா ?

சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும்.

எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

சனிக்கிழமைகளில் எள் எண்ணையில் தீபம் ஏற்ற வேண்டும்.

பிரதோஷ பு ஜைகளில் பங்கேற்பது நல்லது.

பொறுமையை கையாள்வது நல்லது

நாம் சனி பகவானுக்கு என்ன செய்ய வேண்டும் ?

தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

சனிக்கிழமைத்தோறும் நல்லெண்ணைய் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

அனாதை இல்லங்கள்,முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

கோமாதா பு ஜை செய்யலாம்.

இதையெல்லாம் செய்துவர கண்டிப்பாக சனி பெயர்ச்சி மூலமாக எந்தெந்த ராசியினர் பரிகாரம் செய்ய வேண்டுமோ அந்தந்த ராசியினர் பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.