மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கூலி பாக்கி? மத்திய அரசு பதில்!

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கூலி பாக்கி தர வேண்டும் என மத்திய அரசு பதிலளித்துள்ளது

How much wage arrears to tamilnadu under mgnrega Union govt answer to su venkatesam mp question smp

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், “தமிழ்நாடு அரசுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கூலி பாக்கியாக ஒன்றிய அரசு தர வேண்டிய தொகை எவ்வளவு?” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், ஒன்றிய அரசு நிதி கிடைப்பதில் ஏற்படும் கால இடைவெளி என்ன என்றும், இத்தகைய இடைவெளிகள் இந்த வேலைத்திட்டம் நோக்கி வரும் கிராமப்புற உழைப்பாளிகளின் ஊக்கத்தைப் பாதிக்காதா? எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

தீர்வு கோரி உச்ச நீதிமன்ற கதவுகளை மஹுவா மொய்த்ரா தட்டலாம்: சட்ட வல்லுநர்கள்!

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் கிராமப்புற மேம்பாடு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி,  நவம்பர் 29, 2023 அன்றைய கணக்கின்படி கூலிக்கான ஒன்றிய அரசின் நிதிபாக்கி ரூ 261.85 கோடி என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசம் எம்.பி. கூறுகையில், “இத்தகைய நிதி அளிப்பில் உள்ள கால இடைவெளி பற்றி தெளிவான பதில் தரவில்லை. மாறாக இரண்டு முறை, முறைக்கு ஒன்றோ இரண்டோ தவணைகளில் நிதி அளிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். நிதி அளிப்பில் உள்ள இடைவெளி கிராமப்புற உழைப்பாளிகளின் ஊக்கத்தைப் பாதிக்காதா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைச்சர் கடந்து சென்றுள்ளார். ஆனால் இத்தகைய நிதி வரத்தில் உள்ள தாமதம், வேலை கோரல்களில் சரிவை உருவாக்கி உள்ளது என்று நிறைய செய்திகளும் தரவுகளும் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கான நிதி பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios