குஷ்புவுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை திமுகவில் உள்ளவர்கள் இவ்வளவு கேவலமாகப் பேசுவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது நிகழ்ச்சியில் அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியைக் கண்டித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியிறுத்தியுள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை இழிவாகப் பேசியதற்கு ஆதரவாக அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து குஷ்புவின் ட்விட்டர் பதிவை ரீ-ரீவிட் செய்து தன் கருத்தைப் பதிவிட்டுள்ள அண்ணாமலை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ரவியை இழிவாகப் பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார். "தமிழ்நாட்டில் பொதுவெளியில் திமுகவினர் பேசும் பேச்சு இது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் கட்சிக்காரர்கள் இவ்வளவு கீழ்த்தரமானவர்களா? உங்கள் பிரபலமான பேச்சுகளும், நீங்கள் செய்யும் செயல்களும் ஒன்றுபோல் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர், அண்ணாமலை, குஷ்பூவை தரக்குறைவாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக கைது!!

Scroll to load tweet…

"தமிழக ஆளுநர் மற்றும் பாஜக தலைவர் குஷ்பு சுந்தர் ஆகியோர் குறித்து இவர் கூறிய கருத்துகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்தைச் செய்துவரும் இந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்" என்றும் அண்ணாமலை கோரியுள்ளார்.

சமீபத்தில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அவதூறாகப் பேசியதுடன் குஷ்பு பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசினார். பல பெண்கள் கூடி இருந்த பொதுக்கூட்டத்தில் அவரது இந்தப் பேச்சு பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

இந்தப் பேச்சுக்கு பல தரப்பிலும் வன்மையான கண்டனங்கள் எழுந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீண்டும் கட்சியில் சேர முடியாத வகையில் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இப்படிப் பேச யார் உரிமை கொடுத்தது? செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு குமுறிய குஷ்பு

Scroll to load tweet…

கட்சியில் இருந்த நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு கண்டபடி பேசிவரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இதற்கு முன் விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் அவதூறாகப் பேசியதால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு குறித்து நடிகை குஷ்பு காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்திய அவர், பெண்களை இழிவாக பேச திமுகவினருக்கு யார் உரிமை கொடுத்தது? எனக் கேள்வி எழுப்பினார். பெண்களை அவதூறாகப் பேசும் இவரைப் போன்றவர்களை திமுக ஆதரித்த வளர்ப்பதாகவும் குற்றம்சாட்டிய குஷ்பு, அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போதை மயக்கத்தில் இருந்த பெண்ணைத் தூக்கிச் சென்று பலாத்காரம்! இந்திய வம்சாவளி மாணவர் கைது!