How fired without uniform Is this a gun for the polie
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது மேற்று பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரப் படுகொலை, துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றுக் குவித்தப் பின்பும்... இரவு முழுதும் போலீஸாரின் கொலைவெறி தேடுதல் வேட்டை நடத்தியது ஏன் என நாடுமுழுவதும் எதிர்க்குப் குரலாய் ஒலித்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பொதுமக்களை தமிழக போலீஸார் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் அதிகாரபூர்வமற்ற வகையில் பதினைந்து பேர் வரை இறந்ததாக தூத்துக்குடியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயத்துடன் கவலைக்கிடமாக உள்ளார்களாம். அதுமட்டுமல்ல, இன்னும் பல உயிரிழப்புகளை அரசு மறைப்பதாகவும் தெரிகிறது.
நேற்று இரவே தூத்துக்குடிக்கு விரைந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு இரவோடு இரவாக அனைவரது வீட்டுக்கும் சென்று தனது ஆறுதலைத் தெரிவித்தார். அப்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வைகோவிடம் கண்ணீருடனும் ஆத்திரத்துடன் பல தகவல்களை முன் வைத்திருக்கிறார்கள்.

“போராட்டம் நடத்தும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் சொல்கிறது. ஆனால் துப்பாக்கிச் சூடுக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் ரப்பர் குண்டுகளை எல்லாம் பயன்படுத்தாமல், முழங்காலுக்குக் கீழ் சுடாமல் நெஞ்சு, தலை, தொண்டை, வாய் என்று பார்த்துப் பார்த்து சுட்டுக் கொன்றிருக்கிறது போலீஸ். இது கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு அல்ல... திட்டமிட்டு குறிவைத்து நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை’’ என கதறி அழுகின்றனர்.
சீருடை அணியாத போலீசார், வேன் மீது ஏறி சுட்டுத் தள்ளும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. இதற்க்கு முன்பாக, ஆலையை எதிர்ப்பவர்களை சுட்டுக்கொன்றுவிடுவது என்று திட்டம் போட்டு இந்தத் கொடூர தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இல்லையென்றால், முன்கூட்டியே கமாண்டோக்கள் எல்லாம் வரமாட்டார்கள். அதுவும் சீருடை இல்லாமல் எப்படி மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டான்? இவ்வளவு கொடூரமான தாக்குதலை நடத்தியதோடு இல்லாமல், மீண்டும் தூத்துக்குடியில் உள்ள பல பகுதிகளிலும் போலீஸார் வீடு வீடாக தேடுகிறார்கள்.

திரேஸ்புரம் பகுதியில் இரவும் சென்று தேடியிருக்கிறார்கள். மிருகத்தனமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
மேலும் தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே போலீஸார் வேனின் மீது ஏறி நின்றி சுட்ட துப்பாக்கி ரைஃபிள் கன் எனப்படும் வகையானது என்றும், இதை போலீஸார் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் செய்திகள் வருகின்றன. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை குறிபார்த்து இலக்கை சுடும் இந்த வகைத் துப்பாக்கிகளை ஏன் போலீஸார் போராட்டத்தை அடக்கப் பயன்படுத்தினார்கள் என்பதும் இதுவரை விடை தெரியாத கேள்வியாக எழுந்து நிற்கிறது.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் சுட்டுத் தள்ளிவிட்டு இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்பது நாடுமுழுவதும் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.
