இட்லியால் ஜெயலலிதாவின் உருவம் …மெரினா கடற்கரையில் தொண்டர்கள் மனமுருக அஞ்சலி…
முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதையடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி,ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் நாள் தோறும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளுக்கு நாள் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மலர் வளையம் வைத்தும், மொட்டை அடித்துக் தங்களது இதயங்களில் வாழும் அந்த உன்னத தலைவிக்கு தொண்டர்கள் செலுத்தும் அஞ்சலி யாரையுமே மனம் நெகிழச் செய்யும்.
இதனிடையே தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்தினர். ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தை தொடங்கி ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி அனைவரது மனங்களிலும் இடம் பிடித்த ஜெயலலிதாவுக்கு நன்றி செலுத்தும் வகையில் 68 கிலோ இட்லியால் அவரது உருவம் செய்து பார்வைக்காக வைத்தனர்,
பின்னர் அவரை நினைவு கூறும் வகையில் அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் மனமுருக அஞ்சலி செலுத்தினர்.
