நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

நாட்டின் 77வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக மேற்கொள்ளப்பட்டன. சென்னை மெரினா அருகே காமராஜர் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக வீரதீர செயலுக்கான விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார்.