MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூர் 41 பேர் மரணத்திற்கு நீங்களும் காரணம் தானே பனையூர் பண்ணையாரே..! விஜய் மீது இடியை இறக்கிய அதிமுக..

கரூர் 41 பேர் மரணத்திற்கு நீங்களும் காரணம் தானே பனையூர் பண்ணையாரே..! விஜய் மீது இடியை இறக்கிய அதிமுக..

ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என அதிமுக குற்றம் சாட்டி உள்ளது.

2 Min read
Author : Velmurugan s
Published : Jan 26 2026, 07:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ப்ளாக்கில் டிக்கெட் விற்ற விஜய்யும் ஊழல்வாதி தான்..
Image Credit : Asianet News

ப்ளாக்கில் டிக்கெட் விற்ற விஜய்யும் ஊழல்வாதி தான்..

தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் விஜய்யின் பேச்சுக்கு அஇஅதிமுக கடுமையான எதிர்வினை ஆற்றி உள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.

26
மக்களின் நலனுக்காக போராடும் அதிமுக
Image Credit : Asianet News

மக்களின் நலனுக்காக போராடும் அதிமுக

'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!

Related Articles

Related image1
ஊழல் கறை என் நிழலிலும் படாது.. ஊழல் செய்யவும் விட மாட்டேன்.. மேடையில் சபதம் எடுத்த விஜய்!
Related image2
அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்.. தீய சக்தி; ஊழல் சக்தி வர விடமாட்டேன்.. விஜய் சூளுரை!
36
திரைப்பட ரிலீஸ்க்காக 5 மணி நேரம் கை கட்டி காத்திருந்த..
Image Credit : Asianet News

திரைப்பட ரிலீஸ்க்காக 5 மணி நேரம் கை கட்டி காத்திருந்த..

தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!

46
செங்கோட்டையனுக்கு உரிமை கொண்டாடும் அதிமுக..?
Image Credit : Asianet News

செங்கோட்டையனுக்கு உரிமை கொண்டாடும் அதிமுக..?

அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?

56
நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
Image Credit : Google

நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?

ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்… இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!

66
கிளசரின் கண்ணீரோடு பேருக்கு அஞ்சலி நிகழ்ச்சி
Image Credit : Asianet News

கிளசரின் கண்ணீரோடு பேருக்கு அஞ்சலி நிகழ்ச்சி

கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம். அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!

நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக. DOT” என குறிப்பிட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
டிவி.கே. விஜய்
அதிமுக பாஜக கூட்டணி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.. பிரதமரை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. இபிஎஸ் மீதும் சரமாரி அட்டாக்!
Recommended image2
பனிக்கும் வெயிலுக்கும் டாட்டா.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Recommended image3
ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
Related Stories
Recommended image1
ஊழல் கறை என் நிழலிலும் படாது.. ஊழல் செய்யவும் விட மாட்டேன்.. மேடையில் சபதம் எடுத்த விஜய்!
Recommended image2
அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்.. தீய சக்தி; ஊழல் சக்தி வர விடமாட்டேன்.. விஜய் சூளுரை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved