கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ
தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள கற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக உருவெடுத்துள்ளதாலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் வலுவடையும்.
இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?
இதன் காரணமாக திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்
இதையும் படிங்க..கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.. பிரதமருக்கு கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின் !