பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

திண்டுக்கல் காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த புத்தகங்கள் என்ன என்பதே சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியுள்ளது. 

CM MK Stalin presented Ponniyin Selvan book to PM Modi at tn visit

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக  பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம்  மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்தடைந்தார்.

CM MK Stalin presented Ponniyin Selvan book to PM Modi at tn visit

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக மழை காரணமாக அவர் சாலை மார்க்கமாக செல்வதாக இருந்தது.

இதையும் படிங்க..மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

இந்நிலையில், தற்போது மழை இல்லாத காரணத்தினால் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

CM MK Stalin presented Ponniyin Selvan book to PM Modi at tn visit

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக சில புத்தகங்களை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் நாவலான பொன்னியின் செல்வன் நாவலின்ஆங்கில மொழியாக்க புத்தகத்தை வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

இதையும் படிங்க..பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios