கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் செலுத்திய ஊழியர்...!
சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழக்கமான சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் ரத்த ஏற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதற்கு கர்ப்பிணி பெண்ணும் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. அவருக்கு ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தார். பின்னர் உடல் நிலை மோசமடைந்தையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
இந்த ரத்தம் யாரிடம் இருந்து பெற்ப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவரின் ரத்தம்தான் கர்ப்பணிக்கு ஏற்றப்பட்டது தெரிவந்தது. இதுதொடர்பாக ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.