Asianet News TamilAsianet News Tamil

அரசு வேலையை விட எனது மனைவி தான் முக்கியம்... கர்ப்பிணி பெண்ணின் கணவர் உருக்கம்...!

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

HIV blood issue...Pregnant woman husband information
Author
Tamil Nadu, First Published Dec 26, 2018, 1:37 PM IST

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  HIV blood issue...Pregnant woman husband information

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தனக்கு அரசு வேலை தேவையில்லை சிகிச்சை தான் முக்கியம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எச்ஐவி தோற்று பாதிப்புள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் எனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இனி எங்கள் குடும்பத்திற்கு அரசுதான் பொறுப்பு என்றார். HIV blood issue...Pregnant woman husband information

எச்ஐவி விவகாரம் தொடர்பாக அரசு உயரதிகாரிகள் எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கு மனு அளித்தாலும் எனது மேஜைக்கு தான் வருமென அதிகாரி மனோகரன் மிரட்டல் விடுத்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நியாயம் கிடைக்காததால் காவல் நிலையத்தை நாடியுள்ளோம். எனக்கு அரசு வேலை தேவையில்லை, மனைவியின் சிகிச்சை தான் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios