Hindu priests dances inside holy temple
கோவில் என்பது புனிதமான இடம். கோவிலினுள் செய்ய வேண்டியவை எது, செய்யக்கூடாதது எது, என ஆகம விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை பின்பற்றுவது பக்தர்கள் மற்றும் பூசாரிகளின் கடமை.
அதிலும் கடவுளுக்கு கோவிலில் பூஜை செய்யும் பூசாரிகள், ஆச்சாரங்களை கடைபிடித்து வழிபாடுகளை நடத்தக்கூடியவர்கள். ஆனால் அந்த பூசாரிகள் கோவிலினுள் செய்திருக்கும் ஒரு காரியம், பொதுமக்கள் மத்தியில் தற்போது ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது.
ஒரு கோவிலினுள் பூசாரிகள் குத்தாட்டம் போடுவதை போன்ற ஒரு வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பூசாரிகள் ஆடியிருக்கும் நடனம் வேடிக்கையானதாக இருந்தாலும், அந்த செயலை அவர்கள் செய்திருக்கும் இடம் கோவில் என்பதால், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது இந்த வீடியோ.
