Hindu Frontier brancher attacked by bottle Three arrested

திண்டுக்கல்

இந்து முன்னணி கிளை பொறுப்பாளரை பாட்டிலால் குத்திய மூன்று பேரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பெரியகோட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (42). இவர் பந்தல் தொழிலாளியாகவும், இந்து முன்னணி கிளை பொறுப்பாளராகவும் உள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பெரியகோட்டை ஊராட்சி அலுவலகம் அருகே நடத்து சென்ற ராஜமாணிக்கத்தை, அதே ஊரைச்சேர்ந்த டேவிட்ராஜா, ஆனந்தன், முருகேசன் ஆகியோர் வழிமறித்தனர்.

பின்னர், ராஜமாணிக்கத்தை பாட்டிலால் குத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜமாணிக்கம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற காவலாளார்கள் வழக்குப்பதிந்து டேவிட்ராஜா, ஆனந்தன், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து திண்டுக்கல் மத்திய சிறையில் அடைத்தனர்.