Asianet News TamilAsianet News Tamil

தடையை மீறி விநாயகர் ஊர்வலம்… போலீஸாருடன் தகராறு…இந்து முன்னணியை சேர்ந்த 27 பேர் கைது!!

சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சந்திப்பில் தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். 

hindhu munnani members arrested for defying the ban in ganesha procession
Author
First Published Sep 5, 2022, 12:05 AM IST

சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சந்திப்பில் தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 554 சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாநகரம் முழுவதும் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்… புதுமைப்பெண் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்!!

சென்னையில் பாலவாக்கம், பட்டிணப்பாக்கம், ஸ்ரீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் காவல்துறை அனுமதி வழங்கிய பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சந்திப்பில் தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தி மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: நிரப்பப்படாத மின்வாரிய காலி பணியிடங்கள்… மின்சேவை வழங்கும் பணிகளில் மந்தநிலை!!

அதனை மீறி செல்ல முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த இருவரும் போலீசாருடன் தகராறிலும் ஈடுபட்டனர். மேலும் அவர்களுடன் வந்த இந்து முன்னணியினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து இந்து முன்னணி தலைவர் முருகானந்தம், தமிழக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios