Highways can be converted into rural roads by supreme court
மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகமாக விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவேநெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் போராட்டங்களின் மூலம் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றி ஊருக்குள் அமர்த்த அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இதையடுத்து தமிழகத்தின் மாநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தேசிய மாநில நெடுஞ்சாலைகளை நகர சாலைகளாக மாற்ற தமிழக நகராட்சி நிர்வாகம் ஏப்ரல் 21ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
இதைஎதிர்த்து திமுக பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக நகராட்சியின் திட்டத்திற்கு தடை விதித்தது.
இதனால் என்ஜிஓ அமைப்பு உச்ச நீதிமன்றத்த்ல் பொது நல மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
